sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கேரளாவின் பொய் பிரசாரங்களை தடுத்து பெரியாறு அணையில் 152 அடி தேக்க வேண்டும் -விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மனு

/

கேரளாவின் பொய் பிரசாரங்களை தடுத்து பெரியாறு அணையில் 152 அடி தேக்க வேண்டும் -விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மனு

கேரளாவின் பொய் பிரசாரங்களை தடுத்து பெரியாறு அணையில் 152 அடி தேக்க வேண்டும் -விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மனு

கேரளாவின் பொய் பிரசாரங்களை தடுத்து பெரியாறு அணையில் 152 அடி தேக்க வேண்டும் -விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மனு


ADDED : ஜூன் 15, 2024 02:02 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கேரளாவின் பொய் பிரசாரங்களை தடுத்து முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நீர்வளத்துறை அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் தேக்கடி நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில்:

முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன.

152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டத்தை கேரளாவின் பொய் பிரசாரங்களால் 1979ல் 136 அடியாக குறைக்கப்பட்டது.

அதன் பின் தமிழக அரசு மற்றும் விவசாயிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் எனவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் 2014ல் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின்படி 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் பேபி அணை பலப்படுத்த தொடர்ந்து கேரள அரசு பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தடுத்தது.

இதனால் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாமல் தமிழகப் பகுதியில் இருபோக விவசாய நிலங்களில் ஒருபோகம் கூட முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய கண்காணிப்பு குழுவினர் அணைப்பகுதியில் ஆய்வு செய்கின்றனர்.

ஆனால் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் இறங்கவில்லை. அணை பலமாக இருந்தும் கேரளாவின் பொய் பிரசாரங்களால் தமிழக விவசாயிகளும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆதிமூலம், சிவகங்கை மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்வ மனோகரன், செயற்குழு உறுப்பினர்கள் கொடியரசன், ஜெயபால் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us