/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரத்துக்குறைவால் கொத்தமல்லி விலை கிலோ ரூ.140 ஆக உயர்வு
/
வரத்துக்குறைவால் கொத்தமல்லி விலை கிலோ ரூ.140 ஆக உயர்வு
வரத்துக்குறைவால் கொத்தமல்லி விலை கிலோ ரூ.140 ஆக உயர்வு
வரத்துக்குறைவால் கொத்தமல்லி விலை கிலோ ரூ.140 ஆக உயர்வு
ADDED : ஜூன் 15, 2024 02:04 AM
தேனி:தேனி உழவர் சந்தையில் வரத்து குறைந்துள்ளதுடன், தேவையும் அதிகரித்துள்ளதால் கொத்தமல்லி இலை ஒரு கிலோ ரூ.140க்கு உயர்ந்துள்ளது.
உழவர்சந்தைக்கு கடமலைக்குண்டு, வருஷநாடு, சீலையம்பட்டி, சின்னமனுார், போடி ராசிங்காபுரம் பகுதிகளிலிருந்து தினமும் 300 முதல் 400 கிலோ கொத்தமல்லி வரத்து இருக்கும். இம்மாவட்டத்தில் நிலவிய சீதோஷ்ண நிலை மாற்றத்தில் மிக குறைந்த அளவாக தினமும் 50 கிலோ முதல் 100 கிலோ அளவில் தான் தற்போது வருகிறது. இவையும் சில்லரை விற்பனையில் காலியாகி விடுகிறது. வைகாசி, ஆனி மாதங்களில் முகூர்த்த நாட்கள் இருந்ததால் 3 வாரங்களுக்கு முன் கிலோ ரூ.40க்கு விற்ற கொத்தமல்லி நேற்று கிலோ ரூ.140 ஆக உயர்ந்தது.
ஆனாலும் தேவைக்கு கொத்தமல்லி கிடைப்பதும் இல்லை. எனவே சமையல் கான்ட்ராக்டர்கள் ஒசூர், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து கூடுதல் விலைக்கு கிலோ ரூ. 200க்கு வாங்கி வந்து தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.