/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் 8,107 பேர் பங்கேற்பு
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் 8,107 பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் 8,107 பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் 8,107 பேர் பங்கேற்பு
ADDED : செப் 29, 2025 06:40 AM
தேனி : மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய தாலுகாக்களில் 40 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2 ஏ தேர்வுகள் நடந்தது. தேர்வு எழுத 10,556 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதில் 8107 பேர் தேர்வு எழுதினர். 2449 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தேர்வு மையங்களில் வீடியோ பதிவு செய்ய 43 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதில் தேர்வில் பங்கேற்காதவர்கள் இருக்கைகள், அவர்களுக்கான இடத்தில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்துடன் கூடிய வில்லைகள் பதிவு செய்யப்பட்டன. தேர்வு கண்காணிப்பு பணியில் கல்வித் துறையினர், வருவாய்த் துறையினர், போலீசார் உட்பட சுமார் 600 பேர் அறை கண்காணிப்பு, பறக்கும்படை, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.