நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : போடி அருகே சிலமலையில் வ.உ.சிதம்பரனார் அரசு அலுவலர் அறக்கட்டளை சார்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். பொருளாளர் குருநாதன், செயலாளர் செல்வம், முன்னாள் ஆசிரியர் வடமலை முத்து, கிராம கமிட்டி பொருளாளர் சுப்பையன், வேளாள பெரு மக்கள் சங்கத்தின் பொருளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் மாரிமுத்து, ராஜன் வரவேற்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பரிசுகள் வழங்கப்பட்டன. ஆதரவற்ற பெண்ணுக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது. நிர்வாகஸ்தர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், மணிகண்டன், சேத்துரான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

