/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆபத்தான கிளை நூலக கட்டடங்கள் பராமரிக்க நடவடிக்கை தேவை
/
ஆபத்தான கிளை நூலக கட்டடங்கள் பராமரிக்க நடவடிக்கை தேவை
ஆபத்தான கிளை நூலக கட்டடங்கள் பராமரிக்க நடவடிக்கை தேவை
ஆபத்தான கிளை நூலக கட்டடங்கள் பராமரிக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜன 17, 2024 01:01 AM
கம்பம்: மாவட்டத்தில் பெரும்பாலான கிளை நூலக கட்டடங்கள் ஆபத்தான நிலையில் சேதமடைந்துள்ளதால், அதனை சீரமைக்க பொது நூலகத்துறை முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் பல நூலக கட்டடங்கள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது. ஆபத்தை உணராமல் பொது மக்களும் நூலகத்தில் அமர்ந்து படிக்கின்றனர். கிளை நூலகர்கள் அரசின் கவனத்திற்கும், உள்ளூர்களில் உள்ள புரவலர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றும் எந்தவித பலனும் இல்லை.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் துவங்கப்பட்ட நூலகங்கள் பெரும்பாலான கிராமங்களில் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான புத்தகங்களை கரையான் அரித்து வருகிறது.
கம்பம், க. புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பெரும்பாலான கிளை நூலகங்களின் கட்டடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளது.
கம்பம், புதுப்பட்டி நூலகங்களின் கூரை ஆர்.சி., பெயர்ந்து விழுந்துள்ளது. சிறுநீர் கழிப்பறை பெயர்ந்து தனியாக நிற்கிறது. கம்பம் நூலகத்தை சுற்றிச் செடி கொடிகள் வளர்ந்து புதர்களாக உள்ளது.
மழை பெய்தால் நூலகத்தில் அமர்ந்து படிப்பதில் ஆபத்து உள்ளது. மழைநீர் கூரை வழியாக உள்ளே விழுகிறது. எத்தனையோ புரவலர்கள் உள்ளனர்.
ஆனால் கம்பம் பகுதி கிளை நூலகங்களை பராமரிக்க ஒருவரும் முன்வரவில்லை. தினமும் நூற்றுக்கணக் கானவர்கள் படிக்கும் இந்த நூலகங்களை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

