/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை பி.சி.,பட்டியில் தொடரும் திருட்டு

ADDED : ஜன 28, 2024 06:20 AM
தேனி : பழனிசெட்டிபட்டி முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நேற்று முன் தினம் நடந்த கொள்ளையில் 10 பவுன் நகை திருடு போனது. அப் பகுதியில் நடக்கும் தொடர் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆஞ்சநேயா நகர் தனபால், முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி 43. இவர் எல்.ஐ.சி., முகவராக உள்ளார். மதுரையில் நேற்று முன்தினம் நடந்த நிகழச்சிக்காக காலை வீட்டில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு மதியம் வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் வைத்திருந்த ரூ.3.11 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிந்தது. ஜெகதீஸ்வரி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் நேற்று முன்தினம் மதியம் 1:40 மணிக்கு டூவீலரில் வரும் இருவரில் ஒருவர் சுவர் ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
பழனிசெட்டிபட்டி பகுதியில் கடந்த 3 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியது குறிப்பிடதக்கது.
தொடர் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.