ADDED : ஜூன் 28, 2025 12:47 AM

தேனி: ரேஷன்கடைகளில் மின்னணு எடை தராசுகளை புளூடூத் மூலம் இணைத்து பொருட்கள் வினியோகம் செய்வதில் ஏற்படும் குளறுபடிகளுக்கு தீர்வு காணவும்,பகுதி நேர ரேஷன் கடைகளில்கைரேகை பதிவுகள் பதிவேற்றம் ஆகாதபழைய 'பாயிண்ட் ஆப் சேல் மெஷின்' களை திரும்ப பெற்று, புதிய மெஷின் வழங்கிட வேண்டும்என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தொடக்க கூட்டுறவு வங்கிகளின் அனைத்து பணியாளர்கள்சங்கம் (டாக்பியா) சார்பில் தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் அருணகிரி தலைமைவகித்தார். மாவட்டச் செயலாளர் காமராஜ்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் சரவணன், துணைத் தலைவர்கள் காளிப்பாண்டியன், செல்லாண்டி, மாவட்டஇணைச் செயலாளர் சரவணன், பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் தலைமையிலானநிர்வாகிகள் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர்.