/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சீதோஷ்ண நிலை மாற்றம் திராட்சை விற்பனை 'ஜோர்' விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : ஜூன் 14, 2025 05:55 AM
கம்பம்: மாவட்டத்தில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் இருந்த போதும் திராட்சை விற்பனை களைகட்டி கிலோ ரூ.70 வரை விற்று வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்டுகிறது. பெரும்பாலும் பன்னீர் திராட்சை சாகுபடி பிரதான இடம் பிடித்துள்ளது. ஆண்டிற்கு 3 அறுவடை என்பதால், ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும் பகுதி என்ற பெயர் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் துவங்கி ஏப்ரல் வரை வடமாநிலங்களில் இருந்து விதையில்லா திராட்சை வரத்து இருக்கும்.அந்த காலகட்டங்களில் பன்னீர் திராட்சைக்கு விலை இருக்காது. ஏப்ரல், மே மாதங்களில் விதையில்லா திராட்சை வரத்து நின்றவுடன் மாம்பழம் சீசன் துவங்கி விடும்.
அப்போதும் விலை கிடைக்காது. ஆனால் இந்தாண்டு விதையில்லா திராட்சை வரத்து குறைவாக இருந்தது. அதுவும் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. தொடர்ந்து மா சாகுபடியும் அடி வாங்கியதால், மார்க்கெட்டில் பன்னீர் திராட்சைக்கு கிராக்கி உள்ளது. எனவே விலை படிப்படியாக உயர்ந்து தற்போது கிலோ ரூ 70 முதல் 80 வரை விலை போகிறது. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த போதும், திராட்சை விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதனால் திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.