/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
/
மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : ஜூன் 14, 2025 05:57 AM

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை பிரிவில் வாய்புற்றுநோய், தொண்டை, நுரையீரல், மார்பக, குடல், கர்ப்பப்பை வாய், தைராய்டு, பெண் உறுப்பு, ஆண் உறுப்பு, மூளை புற்றுநோய் உட்பட பல்வேறு வகை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்து கடந்தாண்டு ஜன., 145 பேர் பல்வேறு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றனர். இவர்களில் 63 பேர் இறந்த நிலையில் தற்போது 82 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட அரசு மருத்துவமனையில் 2023, 2024ம் ஆண்டுகளில் தலா 50 பேர் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2025ல் ஜூன் 10 ம் தேதி வரை 6 மாதத்திற்குள் 52 பேருக்கு புற்றுநோய் பாதித்துள்ளது. இதில் மார்ப்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக தவறான உணவு பழக்கவழக்கத்தால் குடல் புற்றுநோய் பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆரம்பத்தில் சிகிச்சை பெற்றால் குணமாகலாம்
மாவட்ட அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பாரதி கூறுகையில்: புற்றுநோய் பாதிப்புக்குள்ளாளனவர்கள் இது சரியாகிவிடும் இதிலிருந்து விடுபடுவேன் என நம்பிக்கையுடன் மருந்து எடுத்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதினால் குணமடைவதற்கு வாய்ப்பு அதிகம். புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் பலர் பயம், தயக்கம் காரணமாக நோய் முற்றிய நிலையில் வருவதால் அவர்களை காப்பற்றுவது பெரும் சவாலாக அமைந்துள்ளது.
அதிர்ச்சி: மாவட்டத்தில் இளைஞர்களின் தவறான உணவு பழக்கத்தால் குடல் புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர் வயிற்றுவலி, அல்சர், நாள்பட்ட புண் அறிகுறிகளாகும். இதற்கு காரணம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், அதிகளவில் சுட்டு சாப்பிடும் தந்தூரி உணவு வகைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடல் பருமன் அதிகரிக்காமல் உடற்பயிற்சி, புகையிலை, மது தவிர்ப்பு, மாமிச உணவு குறைத்தல், அதே நேரம் அதிக பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். அடிக்கடி பேதியாய் மலம் கழிப்பது, கருப்பு நிறத்தில் மலம் வருவது, ரத்தம் கலந்து வருவது, உடல் சோர்வு, தூக்கம் வராமல் இரவில் அதிகளவில் மலம் கழிப்பது உள்ளிட்டவை குடல் புற்றுநோய்க்கான அறிகுறி. இதை கண்டறிய ஆசனவாய் வழியாக பெருங்குடலில் 'கோலனாஸ் கோப்பி' பரிசோதனை செய்ய வேண்டும். இந்த நோய்க்கு 15 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றார்.