ADDED : ஜூன் 27, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கல்லுாரியில் அலுவலக உதவியாளர் முத்துமாரி என்பவரை தாக்கியவர்கள் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்க மாவட்ட துணைத்தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முகமது ஆசிக் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் பிரசாத்குமார், நடராஜன், குமரன், பாலகிருஷ்ணன், முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.