ADDED : ஜூன் 27, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கேரளா இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மூன்றாவது முறையாக தீவிரமடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வண்டிப்பெரியாறு, பீர்மேடு, குமுளி பகுதிகளில் பலத்த காற்று ,மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன. இரவிலும் தொடர்ந்து கன மழை தொடர்ந்ததால் வீடுகள் இடிந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இரவில் வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.