/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் ஆப்சென்ட்

ADDED : ஜூலை 25, 2024 09:56 PM
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் போலீஸ் சரகத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி., பல்வீர் சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உட்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை ஜே.எம்., 1 கோர்ட்டில் கடந்த ஆண்டு டிச., 15ம் தேதி துவங்கியது. அப்போது போலீஸ் அதிகாரி பல்வீர் சிங் உட்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.
நான்கு முறை நடந்த வழக்கு விசாரணையின் போது, பல்வீர்சிங் நேரில் ஆஜரான நிலையில், அதன் பின்னர் மூன்று முறை நடந்த வழக்கு விசாரணைக்கு பல்வீர் சிங் ஆஜராகவில்லை. மே மாதம் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜரான பல்வீர் சிங், ஜூனில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், நேற்று நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.எஸ்.பி., பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, எஸ்.ஐ., ஆபிரகாம் ஜோசப் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆஜராகவில்லை. மாஜிஸ்திரேட் திரிவேணி, வழக்கு விசாரணையை ஆக., 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.