/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலி கலெக்டரை மாற்றக்கோரி போராட்டம்
/
திருநெல்வேலி கலெக்டரை மாற்றக்கோரி போராட்டம்
ADDED : ஜூலை 25, 2024 10:04 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி கலெக்டரை கண்டித்தும், அரசு அவரை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பில் சென்றனர்.
திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் அனைத்து துறை ஊழியர்களிடம் தொடர்ந்து விரோத போக்கை கடைபிடித்து, 'சஸ்பெண்ட்' செய்து வருகிறார் என்ற புகார் உள்ளது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டரை சந்தித்து ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தினர்.
எனினும், நடவடிக்கை தொடர்கிறது. ஜூலை 22ல் கலெக்டர் அலுவலகம் முன் வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கலெக்டரை மாற்றக்கோரி திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம், 8 தாலுகா அலுவலகங்கள், இரண்டு கோட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகமும் வெறிச்சோடியது.