/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் 30 கிலோ குட்கா பறிமுதல்
/
மீஞ்சூரில் 30 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஜூலை 28, 2024 01:59 AM
மீஞ்சூர்:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆந்திர மாநிலம், தடா பகுதியில் இருந்து, மீஞ்சூருக்கு, கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, போலீசார் மீஞ்சூர் - வல்லுார் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த மாருதி ஸ்விட் காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில், 30 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன.
விசாரணையில், அத்திப்பட்டு பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றிற்கு, வினியோகம் செய்வதற்காக ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிந்தது.
அதையடுத்து போலீசார், 30கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட, ஆந்திர மாநிலம், தடா பகுதியை சேர்ந்த அனுப்குன்னத், 45, என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீஞ்சூர் பகுதிகளில் எந்தெந்த கடைகளில் குட்கா புகையிலை பொருட்களை வினியோகம் செய்து வந்தார் என தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.