/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடையை ஆக்கிரமித்த பேனர்கள் அகற்றம்
/
நிழற்குடையை ஆக்கிரமித்த பேனர்கள் அகற்றம்
ADDED : ஜூலை 28, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், பள்ளிப்பட்டு கூட்டுசாலையில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுத்தத்தில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து, ஏராளமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், பயணியர் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று இந்த பேனர்கள் அகற்றப்பட்டன. இதற்கான பணியில் கொடிவலசா ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.