/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 10 பேருக்கு நலத்திட்ட உதவி
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 10 பேருக்கு நலத்திட்ட உதவி
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 10 பேருக்கு நலத்திட்ட உதவி
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 10 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஜூலை 28, 2024 01:57 AM
திருவள்ளூர்:விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், 10 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைம வகித்து, வேளாண்மை துறை வாயிலாக, நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டம், 'அட்மா' திட்டத்தில், நேரடி நெல் விதைப்பான்; மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் கத்திரி குழிதட்டு மற்றும் தென்னங்கன்று ஆகியவற்றை 10 விவசாயிகளுக்கு, 22,260 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, சென்னை, சர்க்கரை துறை ஆணையருக்கு, மாவட்ட நிர்வாகம் வாயிலாக கருத்துரு அனுப்பி வைக்குமாறு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
விவசாயிகளுக்கும் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கும் விவசாயம் மற்றும் இதர பணிகளுக்காக வண்டல் மண் எடுப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், வேளாண் இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - வேளாண்மை, மோகன், வேதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.