/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காலை உணவு திட்ட பொருள் 28க்குள் அனுப்ப உத்தரவு
/
காலை உணவு திட்ட பொருள் 28க்குள் அனுப்ப உத்தரவு
ADDED : ஜூலை 28, 2024 01:57 AM
திருவள்ளூர்:காலை உணவு திட்டத்திற்கு தேவையான பொருட்களை, பிரதி மாதம் 28க்குள் அனுப்பி வைக்க வேண்டும், என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், காலை உணவு திட்ட பணிகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
முதல்வரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டம் நடைபெறும் மையங்களை, அனைத்து அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காலை உணவு திட்ட செயல்பாடுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் அதற்குரிய செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருள் தரமாகவும், உணவு அருந்தும் நேரத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கூட்டுறவு துறை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், காலை உணவு திட்டத்திற்க்கு வழங்கப்படும் பொருட்களை பிரதி மாதம் 28க்குள் காலை உணவு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகச்சியில், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்-சத்துணவு பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.