/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தானியங்கி ரயில்வே கேட் பாதை சீரமைப்பதில் அலட்சியம்: வாகன ஓட்டிகள் திணறல்
/
தானியங்கி ரயில்வே கேட் பாதை சீரமைப்பதில் அலட்சியம்: வாகன ஓட்டிகள் திணறல்
தானியங்கி ரயில்வே கேட் பாதை சீரமைப்பதில் அலட்சியம்: வாகன ஓட்டிகள் திணறல்
தானியங்கி ரயில்வே கேட் பாதை சீரமைப்பதில் அலட்சியம்: வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஜூன் 08, 2024 11:02 PM

திருத்தணி: திருத்தணி பஜார் ரயில்வே தானியங்கி கேட் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இதுதவிர, கச்சேரி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ஜோதிசாமி தெரு, பெரியதெரு, கீழ்பஜார், அரசு மருத்துவமனை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பகுதிகளுக்கு அதிகாலை, 4:00 மணி முதல் நள்ளிரவு வரை மக்கள் நடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ரயில்வே கேட் பாதை தார்ச்சாலையாக இருந்தது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட் பாதை தரம் உயர்த்துவதாக கூறி, தார்ச்சாலையை அகற்றியது.
பின் 20 நாட்களுக்கு பின், ரயில்வே கேட் பாதை முறையாக சீரமைக்காமல் அரைகுறையாக பாதை அமைத்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
ஆனால், கேட் பாதை, மேடு, பள்ளங்களாக இருப்பதால் வாகன ஓட்டிகள் ரயில்வே கேட் பாதையை கடக்கும் போது, அடிக்கடி தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். மேலும் நடந்து செல்பவர்களும் தவறி விழுந்து எழுந்து செல்கின்றனர்.
ரயில்வே கேட் பாதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
எனவே கலெக்டர், விரைந்து நடவடிக்கை எடுத்து ரயில்வே கேட் பாதையை சீரமைக்க வேண்டும் என ரயில்வே துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.