/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் பெய்த மழையால் மலைப்படிகளில் மண் நிரம்பியது
/
திருத்தணியில் பெய்த மழையால் மலைப்படிகளில் மண் நிரம்பியது
திருத்தணியில் பெய்த மழையால் மலைப்படிகளில் மண் நிரம்பியது
திருத்தணியில் பெய்த மழையால் மலைப்படிகளில் மண் நிரம்பியது
ADDED : ஜூன் 08, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணியில் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணி முதல் இரவு, 11:30 மணி வரை பலத்த மழை பெய்தது.
மாவட்டத்திலேயே, திருத்தணியில் 7.3 செ.மீ., மழை அதிகளவில் பெய்தது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில் பெய்த மழையால், வெள்ளம் மலைப்படிகள் வழியாக சென்றது. மேலும் மலையில் இருந்த மண் வெள்ளத்தால் அடித்து மலைப்படிகள் மற்றும் அங்குள்ள பாவாடை விநாயகர் கோவில் வளாகம் முழுதும் மண் படர்ந்தது.
இதையடுத்து நேற்று காலை கோவில் அலுவலர்கள் தலைமையில் ஒப்பந்த ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் படிகளில் படர்ந்துள்ள மண்ணை அகற்றினர்.