ADDED : ஜூலை 28, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:கடம்பத்துார் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்துார், பிஞ்சிவாக்கம், வேப்பஞ்செட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அதிகத்துார் சுடுகாடு அருகில் சிலர் பொலிரோ ஜீப்பில் மணல் திருடிக் கொண்டிருந்தனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் இருவரும் தப்பியோடிவிட்டனர்.
அரை யூனிட் மணலுடன் ஜீப்பை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் தேவேந்திரன் மற்றும் உடன் வந்தவரை தேடி வருகின்றனர்.