/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பறிமுதல் வாகனங்களால் பக்தர்கள் அவதி
/
பறிமுதல் வாகனங்களால் பக்தர்கள் அவதி
ADDED : ஜூன் 27, 2025 02:00 AM

பொதட்டூர்பேட்டை:காவல் நிலையம் எதிரே, சிவன் கோவிலுக்கு செல்லும் வழியில் மண்ணோடு மண்ணாக மட்கும் நிலையில் உள்ள பறிமுதல் வாகனம் அகற்றப்படாததால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருத்தணி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, 'டி6' காவல் நிலையம், பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ஸ்ரீகாவேரிராஜபேட்டை ஊராட்சியில் அமைந்துள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், இந்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லாரி மட்டும் காவல் நிலையத்திற்கு எதிரே, ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிற்கும் இந்த லாரியில் உள்ள மணலில், செடிகள் வளர்ந்துள்ளன.
எனவே, இந்த லாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.