/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோலார் மின் விளக்குகள் பழுது மனோபுரம் கிராம மக்கள் அச்சம்
/
சோலார் மின் விளக்குகள் பழுது மனோபுரம் கிராம மக்கள் அச்சம்
சோலார் மின் விளக்குகள் பழுது மனோபுரம் கிராம மக்கள் அச்சம்
சோலார் மின் விளக்குகள் பழுது மனோபுரம் கிராம மக்கள் அச்சம்
ADDED : ஜூன் 27, 2025 02:03 AM

பொன்னேரி:வழிப்பறி சம்பவங்களை தடுக்க பொருத்தப்பட்ட சோலார் மின்விளக்குகள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து கிடப்பதால், கிராமவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த சின்னமனோபுரம், பெரியமனோபுரம், ரெட்டிப்பாளையம் ஆகிய கிராமங்களில், 2020ல், பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன.
இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையில் நடந்து செல்லும் பெண்கள் ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி, தாக்கியும் வழிப்பறிகள் நடந்தன.
இங்கு, தெருவிளக்கு வசதியில்லாததால், அதை பயன்படுத்தி இரவு நேரங்களில் நடந்த வழிப்பறி சம்பவங்களால் கிராமவாசிகள் அச்சமடைந்தனர். மேலும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதை தொடர்ந்து, மனோபுரம் - ரெட்டிப்பாளையம் இடையேயான சாலையில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால், சோலார் மின்விளக்குகள் பராமரிப்பு இன்றி பழுதடைந்தும், சேதமடைந்தும் உள்ளன.
மேலும், சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மாயமாகி உள்ளன. மின்விளக்கு வசதியின்றி, சாலை இருண்டு கிடக்கிறது. இதனால், மீண்டும் வழிப்பறி சம்பவங்களுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்துடன் கிராமவாசிகள் பயணிக்கின்றனர்.
எனவே, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், சோலார் மின்விளக்குகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.