/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆம்னி பஸ்சில் தீ: 26 பயணியர் தப்பினர்
/
ஆம்னி பஸ்சில் தீ: 26 பயணியர் தப்பினர்
ADDED : செப் 19, 2025 02:48 AM

பள்ளிகொண்டா:ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்து நாசமான நிலையில், 26 பயணியர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
சென்னையில் இருந்து, 26 பயணியரை ஏற்றிக்கொண்டு, ஆதித்யா என்ற ஆம்னி பஸ் பெங்களூரு நோக்கி சென்றது.
நேற்று அதிகாலை, 1:30 மணியளவில், வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரிக்கும் - கொல்ல மங்கலத்திற்கும் இடையே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. டிரைவர், பஸ்சை நிறுத்தினார்.
பஸ்சில் இருந்த, 26 பயணியரும் அலறியடித்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் பஸ் முழுதும் தீப்பிடித்து எரிந்தது. குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.