/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்தில் தீப்பிடித்து எரிந்த லாரி, பைக்
/
விபத்தில் தீப்பிடித்து எரிந்த லாரி, பைக்
ADDED : ஜூன் 23, 2025 03:07 AM

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் தடா அருகே வெங்கடாதிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 47. நேற்று காலை, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபுளாபுரம் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், பைக்குடன் கீழே விழுந்தார்.
அதே திசையில் சென்றுக்கொண்டிருந்த லாரியில் அடியில் பைக் சிக்கியது. துாக்கி வீசப்பட்ட முருகன் காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியின் கீழ் சிக்கிய பைக், 50 மீட்டர் துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டதால், பைக்கில் இருந்து பெட்ரோல் கசிந்து தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக லாரி ஓட்டுனர் கீழே இறங்கினார். பைக்குடன், லாரியின் கேபின் பகுதியும் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், பைக் முற்றிலும் தீயில் கருகி நாசமானது. லாரியின் கேபின் பகுதி மட்டும் சேதமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.