/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீராணத்துாரில் பராமரிப்பின்றி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
/
வீராணத்துாரில் பராமரிப்பின்றி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
வீராணத்துாரில் பராமரிப்பின்றி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
வீராணத்துாரில் பராமரிப்பின்றி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ADDED : செப் 28, 2025 01:39 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வீராணத்துார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீண்டகாலமாக பராமரிப்பின்றி உள்ளது.
மேலும், இந்த தொட்டியில் கொடிகள் படர்ந்துஉள்ளன. கான்கிரீட் துாண்களும் வலுவிழந்து, பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால், எந்த நேரத்திலும் நீர்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி, ரேஷன் கடை, வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும், பராமரிக்கப்படாத நீர்த்தேக்க தொட்டி, சுத்தம் செய்யப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் கடைசியாக சுத்தம் செய்யப்பட்ட நாள் குறிப்பிடப்படுவது வழக்கம். அந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.