/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
6 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத ஊராட்சி சேவை மைய கட்டடம்
/
6 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத ஊராட்சி சேவை மைய கட்டடம்
6 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத ஊராட்சி சேவை மைய கட்டடம்
6 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத ஊராட்சி சேவை மைய கட்டடம்
ADDED : ஜூன் 19, 2025 01:43 AM

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் நாபளூர் ஊராட்சி நாபளூர் கிராமத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது.
இக்கட்டடத்தில் இ - சேவை மையம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள் நடைபெறுவதற்கு ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், கட்டடம் கட்டி முடித்தும், மின் இணைப்பு கொடுக்காததால், பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. மேலும், போதிய பராமரிப்பின்றி உள்ளதால், கட்டடம் இடிந்து விழும் அபாய நிலைக்கு விரைவில் வந்துவிடும்.
தற்போது, இக்கட்டடத்தில் சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடப்பதாக பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், அரசு பணம் வீணாகி வருகிறது.
எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஊராட்சி சேவை மைய கட்டடத்திற்கு மின் இணைப்பு பெற்று, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.