/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
நான்கு ஆந்திர சிறுவர்கள் மன்னார்குடி அருகே மீட்பு
/
நான்கு ஆந்திர சிறுவர்கள் மன்னார்குடி அருகே மீட்பு
ADDED : ஜூன் 26, 2025 02:21 AM
மன்னார்குடி:ஆந்திர மாநிலத்தில் இருந்து நான்கு சிறுவர்களை, வாத்து மேய்க்க அழைத்து வந்த தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டிபத்மா, 42. இவரது மகன் பாண்டிலாரன்ஸ், 23. தாய், மகன் மன்னார்குடியில் வாத்து வளர்த்து வருகின்றனர்.
வாத்து மேய்க்க, மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த, 10 முதல், 16 வயது வரை உள்ள நான்கு சிறுவர்களை, தலா, 1 லட்சம் ரூபாய் கொடுத்து, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அழைத்து வந்தனர்.
நேற்று முன்தினம், மன்னார்குடி அருகே எடையர் எம்பேத்தியில், சிறுவர்கள் நான்கு பேர் வாத்து மேய்த்துக் கொண்டிருந்ததை மேலவாசல் வி.ஏ.ஓ., மணிகண்டன் பார்த்து, சிறுவர்களை விசாரித்ததில், அவர்கள், ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என, தெரிந்தது.
தலா, 1 லட்சம் ரூபாய் கொடுத்து, நால்வரையும் அழைத்து வந்திருப்பதாகக் கூறினர். வி.ஏ.ஓ., புகாரில், பாண்டிலாரன்ஸ், பாண்டிபத்மாவை மன்னார்குடி போலீசார் கைது செய்தனர்.