/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தொழிலாளி கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பலி
/
தொழிலாளி கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பலி
ADDED : ஜூன் 29, 2025 02:28 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுக சாலையில் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர்.
அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதியில் நேற்று முன்தினம் பண்டாரம்பட்டி பகுதியை சேர்ந்த மனோகரன், 34, என்பவர் வேலைபார்த்து கொண்டிருந்தார்.
திடீரென அவர் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்தார். தெர்மல்நகர் போலீசார் உடலை மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுப்பினர்.
இதற்கிடையே, உயிரிழந்த மனோகரன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.