/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சைனிக் பள்ளியில் தனித்திறன் போட்டி மாநிலம் முழுவதும் 140 மாணவர்கள் பங்கேற்பு
/
சைனிக் பள்ளியில் தனித்திறன் போட்டி மாநிலம் முழுவதும் 140 மாணவர்கள் பங்கேற்பு
சைனிக் பள்ளியில் தனித்திறன் போட்டி மாநிலம் முழுவதும் 140 மாணவர்கள் பங்கேற்பு
சைனிக் பள்ளியில் தனித்திறன் போட்டி மாநிலம் முழுவதும் 140 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 16, 2024 02:07 AM

உடுமலை;பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், சைனிக் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான தனித்திறனை ஊக்குவிக்கும், 'பிரஜ்னா' நிகழ்ச்சி நடந்தது.
இதில், தமிழகத்திலுள்ள, 15 பள்ளிகளைச்சேர்ந்த, 140 மாணவர்கள் பங்கேற்றனர். பேச்சு போட்டி, கட்டுரை, போட்டோ கிராபி, குறும்படம் தயாரித்தல், ஓவியம், வினாடி - வினா, விவாத நிகழ்ச்சி என பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் தலைமை வகித்தார்.
பிரஜ்னா திட்ட கன்வீனர் டாக்டர் பாலசுப்ரமணியம், தலைவர் மேஜர் ஜெனரல் என்.ஆர்.கே., பாபு, செயல் இயக்குனர் கண்ணன், முன்னாள் மாணவர் சங்க துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
டாக்டர் பாலசுப்ரமணியம் கூறியதாவது: பள்ளி மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், அமராவதி சைனிக் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
மாணவர்களின் வாழ்க்கையில், சவால்கள், இன்னல்களை திறனுடன் எதிர்கொண்டு, வாழ்க்கையில் சிறக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.
தற்போது, உடுமலை அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் அதிக பரிசுகளை பெற்றுள்ளனர். இதே போல், மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படுவதோடு, பள்ளிகளுக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில், அதிக பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு, தெரிவித்தார்.