/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
/
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : ஜூலை 16, 2024 02:07 AM

உடுமலை;திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில், இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணியர் பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகளும், பக்தர்கள் சுவாமி தரிசனமும் மேற்கொண்டு வந்தனர். தோணியாற்றில் இறங்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
கோவில் அதிகாரிகள் கூறுகையில்,' பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி பக்தர்களை அனுமதிக்கவில்லை. மழை குறைந்து, அருவியில் நீர் வரத்து சீராக இருந்தால் மட்டுமே, அனுமதிக்கப்படும்,' என்றனர்.