/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குரூப் -1 தேர்வு 2,809 பேர் எழுதினர்
/
குரூப் -1 தேர்வு 2,809 பேர் எழுதினர்
ADDED : ஜூலை 14, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று நடந்த குரூப்-1 தேர்வில், 2,809 பேர் தேர்வு எழுதினர்; 1,392 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் - 1 முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 13 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தன. முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவர்களுக்கு மட்டும், பிரதான தேர்வுகள் நடத்தப்படும்.
மாவட்டத்தில், 4,201 நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்; அவர்களில், நேற்று, 2,809 நபர்கள் மட்டும் தேர்வு எழுதினர்; 1,392 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வுக்கான ஏற்பாடுகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.