/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடுபொருள் விற்பனையாளர் படிப்பில் 34 பேர் தேர்ச்சி
/
இடுபொருள் விற்பனையாளர் படிப்பில் 34 பேர் தேர்ச்சி
ADDED : ஜூலை 16, 2024 02:12 AM
உடுமலை;தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம், ஓராண்டு வேளாண் விரிவாக்க டிப்ளமோ படிப்பை செயல்படுத்திவருகிறது. இடுபொருள் விற்பனையாளர்களுக்காக இந்த பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான பட்டய படிப்பில், 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும், விவசாய சூழியல், சூழ்நிலைகள், மண் ஆரோக்கிய மேலாண்மை, மானாவாரி விவசாயம், விதை மற்றும் விதை உற்பத்தி, நிர்பாசன தொழில்நுட்பங்கள், களை மேலாண்மை, பண்ணை சாதனங்கள், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து, செயல்முறை விளக்கங்களுடன் கற்றுள்ளனர்.
இடுபொருள் விற்பனையாளர்களுக்கான பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் சான்று வழங்கினார்.
வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷீலா பூஷாலட்சுமி உள்பட வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர்.