/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தானியங்களுக்கு ஆதார விலை தேவை; விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
தானியங்களுக்கு ஆதார விலை தேவை; விவசாயிகள் எதிர்பார்ப்பு
தானியங்களுக்கு ஆதார விலை தேவை; விவசாயிகள் எதிர்பார்ப்பு
தானியங்களுக்கு ஆதார விலை தேவை; விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 16, 2024 02:09 AM
உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் மானாவாரியாக, சோளம், மக்காச்சோளம், தட்டை, கம்பு, மொச்சை, கொத்தமல்லி, கொண்டைக்கடலை உட்பட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இச்சாகுபடியில், மழைப்பொழிவு குறைவு உட்பட காரணங்களால், குறைந்தளவு விளைச்சலே கிடைக்கிறது. ஆனால், மானாவாரிதானியங்களுக்கு, போதிய விலையும் கிடைப்பதில்லை.
விதைப்பு மற்றும் களையெடுத்தல் உட்பட பணிகளுக்கு செலவிடும் தொகை கூட, தானியங்கள் விற்பனையில் கிடைப்பதில்லை.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழைப்பொழிவும் குறைந்து, தானியங்களுக்கு விலையும் கிடைக்காததால், நஷ்டமடைந்த விவசாயிகள், படிப்படியாக சாகுபடியை கைவிட்டு வருகின்றனர். பாரம்பரியம் மிக்க தானிய சாகுபடியை பாதுகாக்க, அரசு உதவ எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: அறுவடை சமயத்தில், எந்த தானியத்துக்கும் விலை கிடைப்பதில்லை. தானியங்களுக்கு, ஆதார விலை நிர்ணயித்து, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், வேளாண்துறை வாயிலாக கொள்முதல் செய்யலாம்.
இதனால், விலை வீழ்ச்சி தடுக்கப்பட்டு, மானவாரி சாகுபடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். வரும் ஆடிப்பட்டத்தில், இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.