/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலப்போர்வையில் மிளகாய் சாகுபடி
/
நிலப்போர்வையில் மிளகாய் சாகுபடி
ADDED : ஜூன் 21, 2024 11:52 PM
உடுமலை:விளைநிலங்களில், நிலப்போர்வை அமைத்து, மிளகாய் சாகுபடியில், உடுமலை, மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்று பாசனத்துக்கு பரவலாக காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.
இதில், சிறு, குறு விவசாயிகள், நீர் இருப்பை பொறுத்து, சாகுபடியை தேர்வு செய்கின்றனர். அவ்வகையில், பச்சை மிளகாய், வெண்டை உள்ளிட்ட சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இச்சாகுபடியிலும், தண்ணீர் சிக்கனத்துக்காக, நிலப்போர்வை (மல்ஷிங் ஷீட்) அமைக்கும் முறையை பின்பற்றி வருகின்றனர். நிலப்போர்வை அமைப்பதால் நீர் நேரடியாக ஆவியாவது தடுக்கப்படுவதுடன், மண்ணின் ஈரப்பதமும் பாதுகாக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சீசனில், நிலப்போர்வை அமைக்கும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியமும் வழங்கப்படுகிறது. இதனால், இத்தொழில்நுட்பத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.