/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு
/
உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூன் 25, 2024 11:44 PM

உடுமலை:உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் துவங்கியுள்ள நிலையில், விலையும் சீராக உள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு, பருவ மழைகள் குறைந்த நிலையில், நடப்பாண்டும், குளிர் கால மழை, கோடை கால மழை குறைந்தது. வெயிலின் தாக்கமும் அதிகரித்ததால், சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.
இதனால், சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததோடு, திடீர் மழை காரணமாக குறைந்தளவு சாகுபடி செய்யப்பட்டிருந்த செடிகளும் பாதித்தது. உள்ளூர் தக்காளி வரத்து குறைந்ததால், ஆந்திரா மற்றும் பெங்களூரு தக்காளி வரத்து காணப்பட்டது.
இந்நிலையில், தென் மேற்கு பருவ மழை துவங்கியதால், மீண்டும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனால், உடுமலை சந்தைக்கு மீண்டும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று, 3 ஆயிரம் பெட்டிகள் வரை விவசாயிகள் தக்காளி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 14 கிலோ கொண்ட பெட்டி, ரூ.750 வரை விற்றது.