/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட வாலிபால் பங்கேற்க அழைப்பு
/
மாவட்ட வாலிபால் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூலை 14, 2024 12:41 AM
திருப்பூர்;திருப்பூர், காங்கயம் ரோடு, ஜெய் நகர், வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆண்டுதோறும் மாவட்ட வாலிபால் போட்டியை நடத்துகிறது.
வரும், 26, 27ம் தேதி, நடப்பாண்டுக்கான மாவட்ட போட்டி, இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவுக்கு நடக்கிறது. முதல் நாள் மாணவருக்கும், இரண்டாம் நாளாக மாணவியருக்கும் போட்டி நடக்கிறது. இளையோர் பிரிவில், 2011 ஜன., 1 அன்றோ அல்லது அதன் பின் பிறந்தவரோ, மூத்தோர் பிரிவில், 2006 ஜன., 1 அன்றோ அல்லது அதன் பின்னரோ பிறந்தவர் விண்ணப்பிக்கலாம். அணிக்கு, 12 பேர் வீதம் பங்கேற்க, பதிவு செய்ய, அனுமதி இலவசம். போட்டிகள் அனைத்தும் 'நாக்--அவுட்' முறையில் நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 88830 18907 என்ற எண்ணில் அழைக்கலாம் என, பள்ளி செயலர் நகுலன் பிரணவ் தெரிவித்தார்.