/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நாக்' கமிட்டி ஆய்வு விவரம்: பெங்களூரு அனுப்பி வைப்பு
/
'நாக்' கமிட்டி ஆய்வு விவரம்: பெங்களூரு அனுப்பி வைப்பு
'நாக்' கமிட்டி ஆய்வு விவரம்: பெங்களூரு அனுப்பி வைப்பு
'நாக்' கமிட்டி ஆய்வு விவரம்: பெங்களூரு அனுப்பி வைப்பு
ADDED : ஜூலை 14, 2024 12:44 AM

திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, உயர் கல்வித்துறையின், 'பி' அந்தஸ்தில் உள்ளது. 'ஏ' கிரேடு அந்தஸ்து பெற, கல்லுாரி நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது.
கடந்த, 11, 12ம் தேதி, உ.பி., வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலை துணைவேந்தர் ராஜேஷ்சிங் தலைமையிலான நாக் கமிட்டி பேராசிரியர் குழுவினர் கல்லுாரியில் ஆய்வு நடத்தினர்.
கல்லுாரி ஆய்வகம், வகுப்பறை துவங்கி, விளையாட்டு மைதானம், ஆசிரியர், மாணவர் எண்ணிக்கை, பி.எச்.டி., முடித்து பணியாற்றி வரும் ஆசிரியர் குழுவினரின் ஆய்வறிக்கை உள்ளிட்ட விபரங்கள் வரை கேட்டறிந்து, குறிப்பெடுத்து விபரம் சேகரித்துள்ளனர்.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், 'தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் (நாக்) கல்லுாரி செயல்பாடு, விபரம் குறித்து மதிப்பீட்டு அறிக்கையினை, பெங்களூருவில் உள்ள தேசிய தர மதிப்பீட்டு மன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு வல்லுநர்கள் ஆய்வுக்கு பின், கல்லுாரி தரம் உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது,' என்றார்.