/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருகூர் - முத்துார் வரை சாலையோரம் எண்ணெய் குழாய்
/
இருகூர் - முத்துார் வரை சாலையோரம் எண்ணெய் குழாய்
ADDED : ஜூலை 14, 2024 12:43 AM

திருப்பூர்;எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தில், இருகூர் முதல் முத்துார் வரையில், நெடுஞ்சாலை ரோட்டோரமாக குழாய் பதிக்க வேண்டுமென, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் செந்தில்குமார், கணேசன் ஆகியோர், அமைச்சர் சாமிநாதனிடம் அளித்த மனு:
எண்ணெய் குழாய் பதிக்கும் முதல் திட்டம், இருகூரில் இருந்து கரூர் வரை செல்கிறது. இரண்டாவது திட்டம், இருகூரில் இருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில், முத்துாரில் இருந்து பெங்களூரு வரை, 270 கி.மீ., துாரம், இத்திட்டம் ரோட்டோரமாக குழாய் பதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
முத்துரை வரை, ஏற்கனவே விவசாய நிலங்களில் இருக்கும் குழாய் அருகே அமைப்பது போல் திட்டமிட்டுள்ளனர். தமிழக அரசு, கெயில் எரிகாற்று குழாய் திட்டத்தை 360 கி.மீ., துாரம், இந்தியன் ஆயில் எண்ணெய் குழாய் திட்டம், 152 கி.மீ., துாரமும், இத்திட்டத்தை முத்துாரில் இருந்து ரோடு மார்க்கமாக அமைக்க வேண்டுமென திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தில், மீண்டும் விவசாய நிலத்துக்குள் குழாய் பதித்து விவசாயிகளை பழிவாங்க நினைக்கின்றனர். இரண்டாவது திட்டத்தில், முத்துார் முதல் பெங்களூரு வரை, ரோட்டோரமாக குழாய் பதிக்கப்படுகிறது; அதேபோல், இருகூரில் இருந்து முத்துார் வரையிலான துாரத்தில், புதிய திட்டத்தில் பதிக்க உள்ள குழாயையும், ஏற்கனவே விவசாய நிலத்தில் உள்ள குழாயையும் எடுத்து, நெடுஞ்சாலை ரோட்டோரமாக பதிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.