/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10 ஆயிரம் மரக்கன்றுகளுடன் உருவாகும் மாரியம்மன் வனம்
/
10 ஆயிரம் மரக்கன்றுகளுடன் உருவாகும் மாரியம்மன் வனம்
10 ஆயிரம் மரக்கன்றுகளுடன் உருவாகும் மாரியம்மன் வனம்
10 ஆயிரம் மரக்கன்றுகளுடன் உருவாகும் மாரியம்மன் வனம்
ADDED : ஜூலை 14, 2024 12:47 AM

பல்லடம்;பல்லடம் அருகே, வனம் அமைப்புடன் பல்வேறு அமைப்புகள் இணைந்து, 10 ஆயிரம் மரக்கன்றுகளுடன் 'மாரியம்மன் வனம்' அமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளன.
பல்லடம் வனம் அமைப்பு, திருப்பூர் பிரித்வி நிறுவனம், திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர் சங்கம் மற்றும் திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து, மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது.
முதல் கட்டமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு, வனம் அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். பூமலுார் முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில் வரவேற்றார். பிரித்வி நிறுவன நிர்வாகி பாலன், கல்குவாரி உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மேற்கு ரோட்டரி தலைவர் ரகுபதி, மங்கலம் அறிவுத்திருக்கோவில் நிர்வாகி சந்தானம் முன்னிலை வகித்தனர்.
வனம் நிர்வாகிகள், கல்குவாரி உரிமையாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், பிரித்வி நிறுவன ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.