/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயிலாடுதுறை - சேலம் பாசஞ்சர்; கோவை வரை நீட்டிக்க வலியுறுத்தல்
/
மயிலாடுதுறை - சேலம் பாசஞ்சர்; கோவை வரை நீட்டிக்க வலியுறுத்தல்
மயிலாடுதுறை - சேலம் பாசஞ்சர்; கோவை வரை நீட்டிக்க வலியுறுத்தல்
மயிலாடுதுறை - சேலம் பாசஞ்சர்; கோவை வரை நீட்டிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2024 01:30 AM
திருப்பூர்;'மேற்கு மண்டல பயணிகள் வசதிக்காக, மயிலாடுதுறை - சேலம் ரயிலை, கோவை வரை நீட்டிக்க வேண்டும்,' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமும் காலை, 6:20 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும் சேலம் எக்ஸ்பிரஸ் (எண்:16811) ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம் வழியாக பயணித்து, மதியம், 1:45 மணிக்கு சேலம் வந்தடைகிறது. மறுமார்க்கமாக மதியம், 2:05 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:45 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேருகிறது.
கோவையில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை செல்ல ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்:12084) உள்ளது. 23 முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க முடியும். ஈரோட்டில் இருந்தும் மயிலாடுதுறைக்கு நேரடி ரயில் இல்லை. நள்ளிரவு, 1:00 மணிக்கு ஈரோடு வரும், மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (எண்:16232) ரயிலில் பயணிக்க வேண்டிய நிலையே உள்ளது.
ரயில் பயணிகள் கூறியதாவது:
கோவை, திருப்பூரில் இருந்து ஈரோடு சென்று, மைசூரில் இருந்து வரும் மைசூர் எக்ஸ்பிரஸில் பயணிக்க வழியில்லை. இந்த ரயிலில், இரண்டு முன்பதிவில்லா பெட்டி மட்டுமே உள்ளது; கர்நாடகாவில் இருந்து வரும் போது கூட்ட நெரிசலுடன் வருகிறது.
குறிப்பாக, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் செல்ல இரவில் ரயில் இல்லாததால், மைசூர் எக்ஸ்பிரஸில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பெட்டி அனைத்தும் நிறைந்து விடுகிறது. கோவையில் இருந்து இயங்கும் ஜனசதாப்தி ரயிலில் முன்பதிவு மட்டும் என்பதால், பலருக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. சேலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, ஈரோடு அல்லது கோவை வரை நீட்டித்தால், பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.