/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., பாசனத்திற்கு நீர் திறப்பதில் சிக்கல்; பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
பி.ஏ.பி., பாசனத்திற்கு நீர் திறப்பதில் சிக்கல்; பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பி.ஏ.பி., பாசனத்திற்கு நீர் திறப்பதில் சிக்கல்; பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பி.ஏ.பி., பாசனத்திற்கு நீர் திறப்பதில் சிக்கல்; பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2024 02:09 AM

உடுமலை;பி.ஏ.பி.,பாசன திட்டத்தின் ஆதாரமாக உள்ள, காண்டூர் கால்வாய் மற்றும் பொதுக்கால்வாய் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு, 4 மற்றும் முதல் மண்டல பாசனத்திற்கு பற்றாக்குறையாக நீர் வழங்கப்பட்டு, ஏப்.,மாதம் பாசனம் நிறைவு செய்யப்பட்டது. தொடர்ந்து, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும், காண்டூர் கால்வாயில், விடுபட்ட பகுதிகள் புதுப்பிக்கும் பணி துவங்கியது.
அதே போல், அணையிலிருந்து, பிரதான கால்வாய் மற்றும் உடுமலை கால்வாய்க்கு நீர் திறக்கும் பொதுக்கால்வாயில், 8.55 கோடி மதிப்பில், 1,200 மீட்டர் நீளத்திற்கு, இரு பிரிவுகளாக பணிகள் நடக்கிறது.
காண்டூர் கால்வாயில், இறுதி கட்ட பணி நடக்கும் நிலையில், பொதுக்கால்வாயில், 294 மீட்டர் வரை, பழைய கரைகள் அகற்றப்பட்டு, புதிதாக கான்கிரீட் மற்றும், 1,200 மீட்டர் வரை கான்கிரீட் மற்றும் கற்கள் அடுக்கும் பணி நடக்கிறது.
தற்போது, 40 சதவீதம் மட்டுமே பணிகள் நடந்துள்ளதால், ஆக.,மாதம் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது.
பி.ஏ.பி., விவசாயிகள் கூறுகையில், 'பருவமழைகள் ஏமாற்றியதால், பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆக.,மாதத்தில் நீர் திறக்காவிட்டால், பாசன பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும். எனவே, புதுப்பிக்கும் பணியை விரைந்து முடித்து, நீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.