நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஸ் மோதி இளைஞர் பலி
அரியலுார் மாவட்டம், காமரசாவலி பகுதியை சேர்ந்த மருததுரை என்பவர் மகன் திருமுருகன், 24. இவர் நேற்று கொடுவாய் அருகே இருசக்கர வாகனத்தில் ரோட்டை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது திருப்பூரிலிருந்து தாராபுரம் நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில், அதேயிடத்தில் உயிரிழந்தார். இது குறித்து, அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாராய ஊறல்: முதியவர் கைது
தாராபுரம், கொளத்துப்பாளையம், மூகாம்பிகை நகரில் தோட்டத்தில் சாராயம் இருப்பது குறித்து மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக, அன்னசாமி, 59 என்பவரை கைது செய்து, 2 லிட்டர் சாராயம், 30 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.