/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விழிஞ்ஞம் துறைமுகத்தால் ஏற்றுமதி எளிதாகும் திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு
/
விழிஞ்ஞம் துறைமுகத்தால் ஏற்றுமதி எளிதாகும் திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு
விழிஞ்ஞம் துறைமுகத்தால் ஏற்றுமதி எளிதாகும் திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு
விழிஞ்ஞம் துறைமுகத்தால் ஏற்றுமதி எளிதாகும் திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு
ADDED : ஜூலை 14, 2024 03:35 AM
திருப்பூர்: விழிஞ்ஞம் துறைமுகம் முழு பயன்பாட்டுக்கு வரும்போது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி எளிதாகும் என, ஏற்றுமதியாளர்-கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், விழிஞ்ஞம் துறைமுகம், சர்வதேச கடல் பாதைக்கு மிக அருகே அமைந்துள்ளது. ஆண்டுக்கு, 10 லட்சம் கன்டெய்னர்களை கையாளும் வசதியுடன், துறைமுகம் மூன்று கி.மீ., நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடைகள், கன்டெய்-னர் லாரிகளில் துாத்துக்குடி சென்று, அங்கிருந்து சிறிய கப்பலில் கொழும்பு துறைமுகம் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கிருந்து தான், பெரிய சரக்கு கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. விழிஞ்ஞம் துறைமுகம் முழு பயன்பாட்டுக்கு வரும்போது, திருப்பூர்
பின்னலாடை ஏற்றுமதியில் இருக்கும் சிரமங்கள் குறையும். அவ-சரமாக அனுப்ப வேண்டிய சரக்கை, மும்பை துறைமுகம் வரை எடுத்துச் சென்று அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என, தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து
உள்ளனர்.
அனைத்து ஜவுளி ஏற்றுமதி வர்த்தக முகமைகள் கூட்டமைப்பான 'அபாட்' தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு, பெரிய சரக்கு கப்பல்கள் நேரடி-யாக வந்து செல்லும் வசதி உள்ளது. முதன்முறையாக சீனாவின் கன்டெய்னர் கப்பல், சோதனை ஓட்டமாக வந்து சென்றுள்ளது. கடல் பாதையில், கொழும்புக்கு அடுத்ததாக, விழிஞ்ஞம் துறை-முகத்துக்கு சரக்கு கப்பல்கள் செல்லும்.
திருப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கும், அங்கிருந்து திருவனந்த-புரம் செல்லவும் நல்ல சாலை வசதிகள் உண்டு. தொலைவு சற்று அதிகரித்தாலும், விழிஞ்ஞம் துறைமுகம் செல்லும் போது, பல்-வேறு சிரமங்கள், நேர விரயம் குறையும்.
இனி, துாத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு சரக்கை மாற்றி, கப்பலில் ஏற்ற வேண்டிய சிரமம் இருக்காது; கால விரயம் தவிர்க்கப்படும். விழிஞ்ஞம் துறைமுகம் முழு பயன்பாட்டுக்கு வரும் போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் முழு அளவில் பயன்-பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்