/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குறைந்த செலவில் சி.ஏ., படித்து நிறைவான வருவாய் பெறலாம்!'
/
'குறைந்த செலவில் சி.ஏ., படித்து நிறைவான வருவாய் பெறலாம்!'
'குறைந்த செலவில் சி.ஏ., படித்து நிறைவான வருவாய் பெறலாம்!'
'குறைந்த செலவில் சி.ஏ., படித்து நிறைவான வருவாய் பெறலாம்!'
ADDED : ஜூலை 16, 2024 01:52 AM

திருப்பூர், ஜூலை 16-
''குறைவான செலவில் சி.ஏ., படிப்பவருக்கு, அதிக வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளும் நிரம்பியுள்ளது,'' என, ஆடிட்டர் சங்க வழிகாட்டி நிகழ்ச்சிக்கான அகில இந்திய தலைவர் ராஜேந்திரகுமார் பேசினார்.
இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் திருப்பூர் கிளை மற்றும் கல்வி வழிகாட்டு குழு சார்பில், சி.ஏ., படிப்பு தொடர்பான வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய தலைவர் ராஜேந்திர குமார் பேசியதாவது:
ஆடிட்டர் படிப்பு முடித்தவர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறது.
மாணவிகள் மன உறுதியுடன் தேர்வை எதிர்கொண்டால், சி.ஏ., தேர்வு என்பது கடினம் என்ற அச்சம் தேவையில்லை. ஏராளமான மாணவியர், இத்தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர்.
தேர்ச்சி பெற்றதும், பல்வேறு துறைகளிலும், நிறுவனங்களிலும் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது.
முன்னாள் முதல்வர் காமராஜர் விரும்பியதுபோல், அவரது பிறந்த நாள் விழாவில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மிக குறைந்த செலவில், சி.ஏ., படிப்பை படிக்க முடியும். படித்து முடித்தவர்களுக்கு அதிக வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளும் நிரம்பியுள்ளன.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆடிட்டர்கள் பங்கேற்று, சி.ஏ., படிப்பு குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை, ஆடிட்டர் மனோகரன் மற்றும் விஷ்ணுகுமார் செய்திருந்தனர். செயலாளர் தருண் நன்றி கூறினார்.