/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
/
11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூன் 21, 2025 12:55 AM
திருப்பூர், : திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், தாசில்தார் நிலையிலான அலுவலர்கள் 11 பேரை பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட தேர்தல் பிரிவு தனி தாசில்தார் தங்கவேல், தாரபுரம் கோட்ட கலால் அலுவலராகவும், அங்கு பணிபுரியும் ஜெகஜோதி, காங்கயம் நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும் (ஆதிதிராவிடர் நலத்துறை) மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
காங்கயத்தில் பணிபுரியும் நந்தகோபால், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணிபுரியும் கனகராஜன், மாவட்ட தேர்தல் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பூர் நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தார் சாந்தி, திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு தனி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), அங்கு பணிபுரியும் ஜலஜா, மடத்துக்குளத்துக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
மடத்துக்குளத்தில் பணிபுரியும் கண்ணாமணி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணிபுரியும் ராகவி, அதே அலுவலகத்தில் பறக்கும்படைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அவிநாசி தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்), மாறுதலாகி நெடுஞ்சாலை நிலம் எடுப்பு பிரிவுக்கு செல்கிறார்; திருப்பூர் வடக்கு தனி தாசில்தார் (குடிமைப்பொருள்) உஷாராணி, அவிநாசிக்கு மாற்றப்பட்டுள்ளார். உஷாராணிக்கு பதில், வாணிப கழக உதவி மேலாளர் கோவிந்தசாமி, அந்த இடத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனம் தொடர்பாக எவ்வித கோரிக்ககள் மற்றும் மேல்முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாறுதல் செய்யப்படும் அலுவலர்கள், பணியிடத்தில் சேராதபட்சத்தில், ஊதியமில்லாத அசாதாரண விடுப்பாக கருதப்படும்.
அலுவலர்கள், மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் பணியில் சேர்ந்ததற்கான விவரத்தை உடனடியாக அனுப்பிவைக்கவேண்டும் எனவும், கலெக்டர் எச்சரித்துள்ளார்.