/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல்லை காய வைக்க உலர்களம் தேவை: குமரலிங்கத்தில் நிறைவேறாத எதிர்பார்ப்பு
/
நெல்லை காய வைக்க உலர்களம் தேவை: குமரலிங்கத்தில் நிறைவேறாத எதிர்பார்ப்பு
நெல்லை காய வைக்க உலர்களம் தேவை: குமரலிங்கத்தில் நிறைவேறாத எதிர்பார்ப்பு
நெல்லை காய வைக்க உலர்களம் தேவை: குமரலிங்கத்தில் நிறைவேறாத எதிர்பார்ப்பு
ADDED : பிப் 06, 2024 01:46 AM

மடத்துக்குளம்;நெல் சாகுபடி பிரதானமாக உள்ள குமரலிங்கத்தில், உலர் களம் மற்றும் நெல்லை இருப்பு வைக்க குடோன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, கண்டுகொள்ளப்படவில்லை.
உடுமலை அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, அமராவதி ஆற்றில், தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதில், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு பகுதிகளில், 4 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து, குறுகிய கால நெல் ரகங்களை, சாகுபடி செய்கின்றனர். இப்பகுதியில், போதிய உலர் கள வசதியில்லாததால், அறுவடை சீசனில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
நெல் மணிகளை இயந்திரங்கள் வாயிலாக பிரித்தெடுத்த பிறகு, குறிப்பிட்ட நாட்கள், வெயிலில் உலர வைத்தால் மட்டுமே, ஈரப்பதம் குறைந்து விற்பனைக்கு தயாராகும்.
அப்பகுதி கிராமங்களில், போதிய உலர்களங்கள் இல்லாத நிலையில், ரோட்டிலும், விளைநிலங்களில் தார்ப்பாய் விரித்தும், நெல்லை காய வைக்கின்றனர். இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
விவசாயிகள் கூறியதாவது: நெல் அறுவடை சீசனில், போதிய உலர்களங்கள் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிறு, குறு விவசாயிகள், ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, நெல் கொண்டு செல்ல வாகன செலவு அதிகரிப்பதால், தயக்கம் காட்டுகின்றனர்.
ஈரப்பதத்தை காரணம் காட்டி, விலை நிர்ணயிப்பதில், பாரபட்சம் காட்டுகின்றனர். எனவே, நெல் அதிகளவு சாகுபடியாகும் பகுதிகளில், உலர் களங்கள் கட்ட, மாவட்ட வேளாண் விற்பனை குழு வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் விலை வீழ்ச்சி காலங்களில், நெல்லை இருப்பு வைக்க குடோன் வசதி ஏற்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.