/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டூவீலரில் சென்ற தம்பதியிடம் 9 சவரன் நகை வழிப்பறி
/
டூவீலரில் சென்ற தம்பதியிடம் 9 சவரன் நகை வழிப்பறி
ADDED : அக் 15, 2025 12:02 AM
பல்லடம்; பல்லடம் அருகே, டூவீலரில் சென்ற தம்பதியிடம், 9 சவரன் நகையை வழிப்பறி செய்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.
பல்லடம் அருகே, துத்தாரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், 45 மனைவி சாந்தா, 40. இதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், கடைக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக, டூவீலரில் பல்லடம் நோக்கி வந்தனர்.
பொருட்கள் வாங்கிவிட்டு, தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, வடுகபாளையம் புதுார் பிரிவு அருகே, பைக்கில் வந்த ஆசாமிகள் இருவர், தம்பதியரின் வாகனத்தை வழி மறித்து, சாந்தா அணிந்திருந்த, 9 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது தொடர்பாக, சிவகுமார் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

