/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போன் திருட்டு வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை
/
போன் திருட்டு வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : அக் 15, 2025 12:03 AM
திருப்பூர்; வீடு புகுந்து மொபைல் போன் திருடிச் சென்ற இருவருக்கு, தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் விஜயபுவனேஸ்வரன், 30; பனியன் தொழிலாளி. கடந்த மார்ச், 29-ந்தேதி இவருடைய வீட்டுக்குள் புகுந்து மேஜையில் இருந்த, மொபைல் போனை, 2 பேர் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரித்தனர். அதில், போனை திருடியதாக, புதுக்கோட்டை, திருமயத்தை சேர்ந்த கருப்பையா, 42, மதுரை - திருப்பரங்குன்றத்தை சேர்ந்த தினேஷ், 31 ஆகிய, 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்., 1-வது கோர்ட்டில் நடந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. வீடு புகுந்து மொபைல் போனை திருடிய கருப்பையா, தினேஷ் ஆகியோருக்கு தலா, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு செந்தில்ராஜா தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் கவிதா ஆஜரானார்.

