/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லைசென்ஸ் இல்லாம ஓட்டாதே... டிராபிக் போலீஸ்கிட்ட மாட்டாதே!
/
லைசென்ஸ் இல்லாம ஓட்டாதே... டிராபிக் போலீஸ்கிட்ட மாட்டாதே!
லைசென்ஸ் இல்லாம ஓட்டாதே... டிராபிக் போலீஸ்கிட்ட மாட்டாதே!
லைசென்ஸ் இல்லாம ஓட்டாதே... டிராபிக் போலீஸ்கிட்ட மாட்டாதே!
ADDED : அக் 14, 2025 11:49 PM
திருப்பூர்: விபத்து தடுப்பு மற்றும் பண்டிகை கால திருட்டு குறித்து மக்களை உஷார்படுத்துவதற்காக, கானா பாடல், காமெடி உருவாக்கி, சிக்னல்களில் ஒலிபரப்பி திருப்பூர் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வரும், 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பனியன் நகரான திருப்பூரில், தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்துக்காக ஆடை உள்பட பொருட்கள் 'பர்ச்சேஸ்' செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால், திருப்பூர் நகரின் பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து, கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
மாவட்ட நிர்வாகமும், போலீசாரும், இணைந்து பண்டிகை கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தடுப்பு மற்றும் நுாதன திருட்டுக்களிலிருந்து, மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏ ற ்படுத்தப்பட்டு வருகிறது.
புதுமையான வகையில், கானா பாடல் மெட்டில் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல் உருவாக்கி, சிக்னல் பகுதிகளில் ஒலிபரப்பு செய்து வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலக பகுதி சிக்னல் உள்பட நகர பகுதிகளிலுள்ள சிக்னல்களில், போக்குவரத்து விழிப்புணர்வு கானா பாடலை, போலீசார் ஒலிக்கச் செய்துவருகின்றனர்.
'லைசென்ஸ் இல்லாம வண்டிய ஓட்டாதே; டிராபிக் பி.சி., கிட்ட தேவையில்லாம மாட்டாேத. வாகனத்தில் போகும்போது நிதானம்தான் வேணும்; அந்த நிதானம்தான் இல்லையின்னா மேலத்தானே போணும். அழகான பொண்ணபாத்தா பைக்க ஸ்பீடா ஓட்டாதே; அந்த பொண்ணு கொஞ்சம் சிரிச்சுப்புட்டா ஸ்டைலு போட்டு காட்டாதே' என அந்த கானா பாடல் நீள்கிறது.
அதேபோல், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஸ்டைலில், விழிப்புணர்வு தகவல்களும் தொடர்ந்து ஒலிபரப்பப்படுகிறது. கானா பாடல், நகைச்சுவை வடிவிலான போலீசாரின் விழிப்புணர்வு ஒலிபரப்பை, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அனைவரும் கேட்டு செல்கின்றனர்.

