பென்ஷனர்கள் ஆர்ப்பாட்டம்
'இ.பி.எஸ். - 95' திருப்பூர் மாவட்டஓய்வூதியர்கள் நல சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மனு அளிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமைவகித்தார். 'மத்திய அரசு, இ.பி.எஸ். - 95 பென்ஷனர்களுக்கு, குறைந்தபட்சம் ஒன்பதாயிரம் ரூபாய்ய வழங்கவேண்டும். இ.எஸ்.ஐ., மருத்துவமனைவாயிலாக, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்,' என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்
குடிநீர் இயந்திரம் வழங்கல்
திருப்பூர் தெற்கு ரோட்டரி சார்பில், அரசு பள்ளிகளில் வாட்டர் ஏ.டி.எம்., (சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம்) இலவசமாக பொருத்தப்பட்டுவருகிறது. அவ்வகையில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் நிறுவப்பட்டு, மாணவியரின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவில், தெற்கு ரோட்டரி நிர்வாகிகள் நவமணி, குணசேகர், மோகனசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.
கலை விழாவில் அசத்தல்
ஊத்துக்குளி வட்டார வள மையத்தில், கலைத்திருவிழா போட்டிகள் நேற்று நடந்தது. ஓவியம் வரைதல், களிமண் வேலைபாடு, மணல் சிற்பம், ரங்கோலி, வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், பரத நாட்டியம், தனி நபர் நடிப்பு, பாவனை நடிப்பு, பலகுரல் உட்பட, 14 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தினர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) விஜயலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர் பங்கேற்றனர்.
'நலம் ஒரு பாதை' முகாம்
ரோட்டரி கிளப் ஆப் கோவை சென்ட்ரல், கே.பி.ஆர்., கல்லுாரி ரோட்ராக்ட் கிளப் சார்பில், அவிநாசி அருகே சேவூர் - பந்தம்பாளையத்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் மெட்ரிக் பள்ளியில் 'நலம் ஒரு பாதை' மருத்துவ முகாம் நடந்தது.
தி ஐ பவுண்டேசன், வேதா டென்டல் கேர் மற்றும் ஆதார் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் பங்கேற்று, பரிசோதனை மேற்கொண்டனர். மருத்துவ முகாமில், 350 மாணவர்கள் பங்கேற்று, கண், பல் மற்றும் பொது உடல் நலம் பரிசோதனை செய்து கொண்டனர். தேவையான மருத்துவ ஆலோசனைகளை, மருத்துவர்கள், மாணவர்களுக்கு வழங்கினர்.
கலெக்டர் திடீர் ஆய்வு
குண்டடம் ஒன்றிய பகுதிகளில், கனவு இல்லத்தில், 21 வீடுகள் பணி, அங்கன்வாடி மையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம், கூடுதல் கட்டடம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.54 கோடி ரூபாய் மதிப்பில், நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல் என பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை கலெக்டர் மனிஷ் நாரணவரே, பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பி.டி.ஓ., நாகலிங்கம், உதவி பொறியாளர் ரமேஷ் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.